108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் உரிமை நலன் பாதுகாப்பு சார்ந்த கோரிக்கைகளுக்கான ஆதரவு

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை-9.


மாண்புமிகு அமைச்சர் அவர்கள்,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை-9


பொருள்

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் உரிமை நலன் பாதுகாப்பு சார்ந்த கோரிக்கைகளான

1.சட்ட விரோத 12மணி நேர வேலை நேரத்தை கைவிட்டு சட்டப்படியான 8 மணி நேரம் வேலை நேரம்

2.விலைவாசி உயர்வுக்கு ஏற்ற சம்பளம்

3.சட்டவிரோத பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க கோருதல் தொடர்பாக.

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தமிழக மக்களின் அவசர மருத்துவத் தேவைக்கு உழைத்துக் கொண்டிருக்கும் 6000க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் உரிமை நலன் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்திடும் விதத்தில் தொழிலாளர்களுக்கு

1.சட்ட விரோத 12 மணி நேர வேலை நேரத்தை கைவிட்டு 8 மணி நேரம் வேலை நேரமாக வழங்கிட வேண்டும்.

2.விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு 108ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.

3.108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் உரிமை நலன் பாதுகாப்பு சார்ந்த கோரிக்கைகளை முன்னெடுத்து ஈஎம்ஆர்ஐ-ஜிஎச்எஸ் நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும், முறைகேடுகளுக்கும் எதிராக அமைப்பு ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்ட தொழிற்சங்க முன்னணி ஊழியர்களை ஈஎம்ஆர்ஐ-ஜிஎச்எஸ் நிர்வாகம் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்துள்ளது.அந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.ஆள் பற்றாக்குறைக் காரணம் காட்டி தொழிலாளர்களின் வார விடுமுறை நாட்களில் நிறுத்தி வைக்கப்படும் 108 ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் தங்கு தடை இன்றி 24×7 இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. தமிழக மக்களின் பெருகிவரும் மருத்துவத் தேவைக்கு ஏற்ப 108 ஆம்புலன்ஸ்கள் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயங்கிக் கொண்டிருந்த 108ஆம்புலன்ஸ்களை ஈஎம்ஆர்ஐ-ஜிஹெச்எஸ் நிர்வாகம் அந்த பகுதியில் இருந்து அகற்றி விட்டது. அந்த 108 ஆம்புலன்ஸ்கள் அனைத்தையும் அந்தந்த பகுதி மக்கள் பயன்பாட்டற்கு மீண்டும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் பெருகிவரும் தமிழக மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்திடும் தமிழ்நாடு அரசு பொது சுகாதார துறையின் அதிமுக்கியத்துவ சேவை திட்டமான 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தின் முதுகெலும்பான தொழிலாளர்களை பாதுகாத்து பராமரிப்பதன் மூலம் அந்த சேவை மேன்மேலும் சிறப்பாக நடைபெறவும், தொழிற் சுமூக உறவு பேணி பாதுகாத்திடவும் உரிய நடவடிக்கை எடுத்திடுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.


108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் உரிமை நலன் பாதுகாப்பு சார்ந்த கோரிக்கைகளின் மீது தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு பதிவு எண்1508/MDU இணைப்பு: சி.ஓ.ஐ.டி.யு முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் எங்களுடைய நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறோம் என்று வாக்களிக்கிறோம்.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் உரிமை நலன் பாதுகாப்பு சார்ந்த கோரிக்கைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள